ஆர்.கே.நகரில் 500 குக்கர்கள் பறிமுதல்; பரிசு பொருளா என விசாரணை?

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2017 (20:21 IST)
ஆர்.கே.நகர் பகுதியில் நடைபெற்ற சோதனையில் வேன் ஒன்றில் இருந்து 500 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகிற 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திமுக, அதிமுக மற்றும் சுயேட்சையாக போட்டியிடும் தினகரன் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். தினகரன் பெரிதும் எதிர்பார்த்த தொப்பி சின்னம் அவருக்கு கிடைக்காமல் போனது. 
 
அதற்கு பதில் தேர்தல் ஆணையம் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் காவல்துறையும், தேர்தல் ஆணையமும் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
 
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிக்குள் செல்லும் அனைத்தும் வாகனங்களும் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று நடந்த வாகன சோதனையில் வேன் ஒன்றில் இருந்து 500 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
 
வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் ஏதும் விநியோகிக்கப்படுகிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்கள்

19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது.. கிராம பஞ்சாயத்து தலைவர் வேடத்தில் இருந்ததாக தகவல்..!

ஒபாமா மனைவியின் புதிய போட்டோஷூட்.. இவ்வளவு ஒல்லியாக மாறியது எப்படி? நெட்டிசன்கள் சந்தேகம்..!

ரூ.2,500 கோடி கொகைன் கடத்தல்: துபாய்க்கு தப்பியோடிய முக்கிய குற்றவாளி கைது! இந்தியாவுக்கு நாடு கடத்தலா?

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள்.. கால நீட்டிப்பு வழங்கப்படாது..!

அடுத்த கட்டுரையில்
Show comments