கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.
எனவே, சாதாரண மக்கள் மமுதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்.
இந்நிலையில், மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அந்த வகையில் நாளை முதல் தமிழக அரசு புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், இன்று தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், 50% அரசு ஊழியர்கள் மட்டுமே சுழற்சி முறையில் பணிக்கு வரவேண்டும்.குரூப் ஏ பிரிவு அரசு அதிகாரிகள் பணிக்கு வரவேண்டும். மற்ற அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் மாற்றுத்திறனாளிகள் வாரும் 20 ஆம் தேதிவரை பணிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.