50% சலுகை விலையில் நிலம்: தொழில் தொடங்குபவர்களுக்கு முதல்வர் அளித்த சலுகை

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (16:26 IST)
புதியதாக தொழில் தொடங்குபவர்களுக்கு 50% சலுகை விலையில் நிலம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றதிலிருந்து தொழில் துறைக்கு அதிக முக்கியத்துவம் தந்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவ்வப்போது புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு சலுகைகளை அறிவித்து வருகிறார் என்பதும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு அவர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் 22 மாவட்டங்களில் தொழில் துவங்குவதற்கு 50 சதவீத சலுகை விலையில் நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தென்மாவட்டங்கள் மற்றும் தர்மபுரி, பெரம்பலூர், நாகை உள்ளிட்ட தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்கள் என 22 மாவட்டங்களில் தொழில் துவங்குபவர்களுக்கு 50% சலுகை விலையில் நிலம், உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கும் வகையில் தொழில் கொள்கை அமைந்துள்ளது’ என்று கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments