Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் 50 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று!

Webdunia
வியாழன், 20 மே 2021 (09:43 IST)
கருப்பு பூஞ்சை நோய் எனப்படும் ‘மியூகோர்மைகோசிஸ்’ நோய் பாதிப்பு மதுரையிலும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. 

 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் அதிலிருந்து மீள்பவர்களுக்கு கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவது அதிகரித்துள்ளது. அந்த வகையில், கர்நாடகா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் அதிகம் பரவி வருகிறது. 
 
பூஞ்சை தொற்று காரணமாக கருப்பு பூஞ்சை அல்லது ‘மியூகோர்மைகோசிஸ்’ நோய் ஏற்படுகிறது. இந்த நோய் காது, மூக்கு, தொண்டை பகுதியை பாதிக்க கூடியது. இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோயின் பாதிப்பு தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. ஆம், சென்னையில் 5 பேருக்கு கண்டறியப்பட்ட இந்த நோயின் தாக்கம் தற்போது மதுரையில் 50 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா நோய் தொற்று பாதிப்பு சிகிச்சையின் காரணமாக, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து தற்போது இந்த பாதிப்பு அதிகமாக ஏற்பட்டு வருகிறது. கருப்பு பூஞ்சை அறிகுறி வந்த பின்பு தாமதித்தால் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments