சமீபத்தில் மயிலாடுதுறையில் காவிரி புஷ்கர விழா மிகச்சிறப்பாக நடந்தது என்பதும் இந்த விழாவுக்காக இந்தியா முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் குவிந்திருந்தனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த காவிரி புஷ்கர நீரை தபால் அலுவலகம் பாக்கெட் போட்டு விற்பனை செய்தது. இந்த விழாவில் நேரில் கலந்து கொள்ள இயலாதவர்கள் தபால் அலுவலகம் மூலம் காவிரி புஷ்கர நீரை பெற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் பாக்கெட் ஒன்றுக்கு ரூ.60 என்று விற்பனை செய்யப்பட்ட இந்த நீருக்கு 50% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து புங்கனூர் நுகர்வோர் பாதுகாப்புக் கழகத்தின் ஆலோசகரான விஜயகுமார் என்பவர் தகவல் அறியும் உரிமையின் கீழ் கேட்டு பெற்ற தகவலின்படி இந்த செய்தி உறுதியாகியுள்ளது. பக்தர்கள் வாங்கும் காவிரி நீருக்கே 50% ஜிஎஸ்டி வசூல் செய்த மத்திய அரசை விஜய் வெளுத்து வாங்குவது சரிதானோ?