நாகபட்டினம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சிப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நேற்றிரவு பூரான் கலந்த சாம்பாரை சாப்பிட்டதால் 50 பேர் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.
நாகபட்டினம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சிப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 287 மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று, இரவு உணவாக மாணவிகளுக்கு தோசையுடன் சாம்பார் வழங்கப்பட்ட நிலையில் இதைச் சாப்பிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து,மாணவிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில், 20 க்கும் மேற்பட்ட மாணவிகள் உள் நோயாளிகள் பிரிவிலும், 30க்கும் மேற்பட்ட மாணவிகள் முதலுதவி சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து, மாணவிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.