நேற்றைய 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்த நிலையில், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டும் 50 குழந்தைகள் பிறந்ததாகவும், குழந்தைகளின் பெற்றோருக்கு மருத்துவமனைகளின் சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு தாய் நல மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை, ராயபுரம் அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் மொத்தம் 50 குழந்தைகள் பிறந்ததாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.
புத்தாண்டில் பிறந்த குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மருத்துவமனை சார்பில் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் 13 குழந்தைகள் பிறந்ததாகவும், சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 12 குழந்தைகளும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 குழந்தைகள், ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர். மருத்துவமனையில் 20 குழந்தைகள் பிறந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் அதேபோல், பரிசுகள் வழங்கப்பட்டது.
Edited by Mahendran