Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

50 வயது காமவெறியனுக்கு இரையான 3வது மனைவியின் 5 வயது மகள்

Advertiesment
50 வயது காமவெறியனுக்கு இரையான 3வது மனைவியின் 5 வயது மகள்
, வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (15:26 IST)
வேலூரில் 5 கல்யாணம் செய்த செய்த 50 வயதுடைய ஒருவன் தனது 5 வயது மகளை பாலியல் தொல்லை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
வேலூரில் உள்ள திருப்பத்தூரில் தனது 5 வயது சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக ஐந்து முறை திருமணம் செய்து கொண்ட ஒருத்தனை போலீஸார் போஸ்கோ சட்டத்தின் கீழ்  கைது செய்துள்ளனர்.
 
வேலூரில் உள்ள திருப்பத்தூரில் 50 வயதான ஷன்பாஷா வசித்து வந்துள்ளார். இந்த நபர் பெண்களை வீழ்த்தும் பழக்கம் கொண்டவர். இதனால் நல்ல வாழ்க்கையை தருவதாக உறுதியளித்து ஐந்து பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார். 
 
இந்நிலையில், அவரது மூன்றாவது மனைவி வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதால், ​​ஷன்பாஷாவின் சகோதரி 3வது மனைவியின் 5 வயது மகளை கவனித்துக்கொள்கிறார். ஷன்பாஷா இரவு நேரத்தில் வந்த மகளை அழைத்து செல்வானாம். 
 
அந்த வகையில் சம்பவ தினத்தன்று குடிபோதையில் வந்து மகளை அழைத்து சென்ற அவன் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளான். மறுநாள் இதை அந்த குழந்தை அத்தையிடம் (​ஷன்பாஷாவின் சகோதரி) சொல்லியுள்ளது. 
 
பதறிப்போன அத்தை, குழந்தையை மருத்துவனமைக்கு அழைத்து சென்றுள்ளாள். அதேபோல் தனது அண்ணன் மீது போலீஸுல் புகாரும் அளித்துள்ளார். போலீஸார் ஷன்பாஷாவை கைது செய்து விசாரித்த போது உண்மையை ஒப்புக்கொண்டுள்ளான். 
 
மேலும் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். திருமணத்திற்காக பெண்களை ஏமாற்றும் போதே இவனுக்கு சரியான பாடம் கற்பித்து இருந்தால் குழந்தைக்கு இந்த நிலை ஏற்படாமல் தடுக்கப்பட்டிருந்தக்கூடும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவி உடையில் வந்த பெல்காவி பிஷப் : சர்ச்சையில் சிக்கிய புகைப்படம்