Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் ; :அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

5 லட்சம்  பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் ; :அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
, சனி, 30 நவம்பர் 2019 (21:21 IST)
இந்தியா அளவில், தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் வாழ்வாதாரம் முன்னேற அனைத்து திட்டங்களையும் தீட்டியவர் தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்றும் இன்றும், அவரது வழியில் இன்னும் சிறப்பான திட்டங்களை தீட்டி வருபவர் தான் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று கரூரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் மணவாடி ,கம்மாநல்லுர் உள்ளிட்ட பகுதிகளில்  தமிழக அரசின் விலையில்லா ஆடுகள்,  கறவை  மாடுகள்  மற்றும்  கரூரில் வணிக  வளாகம்  அமைப்பதற்கு  சுமார்  ரூ 5 கோடி மதிப்பில் பூமி பூஜையை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். 
 
தொடர்ந்து பேசிய அவர்  தமிழகத்தில் 5 லட்சம்  பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர்  அறிவித்து உள்ளார் அதன்படி கரூர் மாவட்டத்தில்  முதல்கட்டமாக  8 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது., இந்தியா அளவில் அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக தமிழகத்தை உயர்த்தி காட்டியவர் ஜெயலலிதா என்றார். 
 
அதிலும் குறிப்பாக கிராமப் புற மேம்பாட்டினை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நல்லதிட்டங்களை தீட்டியவர் என்றதோடு, அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற, விலையில்லா ஆடுகள், விலையில்லா மாடுகள் ஆகியவற்றோடு, தற்போது நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கோழிகளையும் இலவசமாக கொடுத்து வருகின்றார். 
 
இதனால் கிராமப்புறங்களில் வசிப்பவர்களின் வாழ்வாதாரம் உயரும் என்ற எண்ணத்தில் பல்வேறு திட்டங்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீட்டியதோடு, இன்று அவரது வழியில், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பல்வேறு நல்ல திட்டங்களை தீட்டி வருகின்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலை ஆட்டைத் தின்ன...கொடூரமாக சண்டையிடும் கழுகுகள்... வைரல் வீடியோ