பிளஸ் டூ தேர்வு எழுத மாணவர்களுக்கு உதவி செய்ததாக ஐந்து கல்வி அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
சமீபத்தில் பிளஸ் டூ தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இந்த தேர்வில் முறைகேடுகள் செய்யப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் நீலகிரி மாவட்டம் மஞ்சூர் என்ற பகுதியைச் சேர்ந்த சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற கணித தேர்வில் மாணவர்களுக்கு விடை எழுத உதவியதாக கல்வித்துறை அலுவலர்கள் 5 பேர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது கல்வித் துறை அலுவலர்கள் ஐந்து மாணவர்களுக்கு விடை எழுத உதவியது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட ஐந்து கல்வித் துறை அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.