Publish Date: Fri, 30 Apr 2021 (13:30 IST)
Updated Date: Fri, 30 Apr 2021 (13:31 IST)
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வட இந்தியாவைப் போலவே இப்போது தமிழகத்திலும் கொரோனா பரவல் இரண்டாம் அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவலை தடுப்பது மிகவும் சவாலாக உள்ளதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.