Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பட்டப்பகலில் 490 சவரன் கொள்ளை!!!

பட்டப்பகலில் 490 சவரன் கொள்ளை!!!
, புதன், 20 பிப்ரவரி 2019 (08:36 IST)
மதுரையில் நேற்று பட்டப்பகலில் அடகுக் கடையில் லாக்கரை உடைத்து ஆயிரத்து 490 சவரன் நகைகள் மற்றும் ரூ.9லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள்  திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மதுரை நரிமேடு கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் கோபிநாத் . இவர் தனது  வீட்டில்  தனலட்சுமி நகை அடகு கடை என்ற பெயரில் நகை அடகுக்கடை வைத்துள்ளார்.
 
மாசி மகத்தை முன்னிட்டு கடையை அடைத்துவிட்டு கோபிநாத் குடும்பத்துடன்  கோவிலுக்குச் சென்றுள்ளார். பிற்பகல் 3 மணியளவில் வீடு திரும்பியபோது அடகுக்கடை பின்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
webdunia

உள்ளே சென்று பார்த்தபோது நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கர் வெல்டிங் இயந்திரம் கொண்டு உடைக்கப்பட்டு, அதிலிருந்த ஆயிரத்து 490 சவரன் நகை மற்றும் 9 லட்ச ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
 
இதுகுறித்து கோபிநாத் அளித்த புகாரின் பேரில் வந்த போலீசார், அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்து விசாரித்து வருகிறார்கள். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் காக்கை டுவீட்: தொடரும் கிரண்பேடியின் கிண்டல்!