12 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தேர்வில் 49 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (18:36 IST)
தமிழ்நாட்டில் இன்று நடந்த 12 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்தேர்வில் 49 ஆயிரம் மாணவிகள் தேர்வெழுதவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு  கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த தேர்வுக்காக 3 ஆயிரத்து 225 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் தமிழகத்தில்  நேற்று முன்தினம் நடந்த  முதல் தேர்வான தமிழ் மொழி தேர்வை 50 ஆயிரத்து 674 மாணவ மாணவிகள் எழுதவில்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்தது.

இந்த நிலையில், இன்று  நடைபெற்ற ஆங்கில பாடத்தேர்விற்கு 49 ஆயிரம் மாணாவ, மாணவிகள் தேர்வுக்கு வரவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாது. என்ற சூழலில் அவர்கள் தேர்வு எழுதவில்லை என்று கூறப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments