Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

41% குழந்தைகள் கொரொனா பயத்தால் பாதிப்பு

41% குழந்தைகள் கொரொனா பயத்தால் பாதிப்பு
, புதன், 7 ஜூலை 2021 (22:53 IST)
இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும்  45  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரொனா  3 வது அலை பரவும் அபாயமுள்ளதால் இதுகுறித்து மருத்துவ நிபுணர்களும்,  விஞ்ஞானிகளும் எச்சரித்துள்ளனர்.

இன்று எய்ம்ஸ் மருத்துவமனை சமீபத்தில் நடத்திய ஆய்வில்  ஒரு முக்கிய தகவலை வெளியிட்டது. அதில், கொரோனா பெருந்தொற்றுப் பதற்றத்தால் சுமார் 41% குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதில், சுமார் 34.05 % குழந்தைகளிடம் இந்தக் கொரொனா தொற்று குறித்த பயம், பதற்றம், கவனமின்மை ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரொனா 3 வது அலை வரும் என எச்சரித்துள்ள நிலையில் அது குழந்தைகளை அதிகம் தாக்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளதால் அவர்களுக்கு இந்த பயம் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரையை எழில்மிகு நகரமாக மாற்ற நடவடிக்கை: நிதியமைச்சர் டுவிட்