Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் எத்தனை சதவிகிதம் பாடத்திட்டங்கள் குறைப்பு? அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (10:49 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதும் இனிமேலும் பள்ளிகள் திறந்தாலும் 100 சதவீத பாடங்களை முடிக்க முடியாது என்பதால் பாடத்திட்டங்கள் இந்த ஆண்டு மட்டும் குறைக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்திருந்தது 
 
வரும் அக்டோபர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது அமைச்சர் செங்கோட்டையன் இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 40 சதவிகிதம் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் எத்தனை தேர்வுகள் வந்தாலும் எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
 
நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து தான் 90 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிறப்பு ஆசிரியர்களாக பணிக்கு சேர்ந்த ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய முடியாது என்று கூறிய செங்கோட்டையன் கல்வி தொலைக்காட்சிகளில் சனிக்கிழமைகளில் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளதால் இந்த கல்வி ஆண்டுக்கு 60 சதவீதம் பாடங்கள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

புயல், கனமழையால் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்த பேரிடர் மேலாண்மை ஆணையம்..!

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments