Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 8 April 2025
webdunia

ஒரே நாளில் 4 வீடுகளில் 45 பவுன் நகைக் கொள்ளை! கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பீதி!

Advertiesment
நகைக் கொள்ளை
, சனி, 30 ஜனவரி 2021 (10:22 IST)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 45 பவுன் நகைகள் நான்கு வீடுகளில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவர் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். ஆனால் அவரின் அண்டை வீட்டார் உங்கள் வீடு திறந்து கிடப்பதாக தகவலளிக்கவே வந்து பார்த்த போது 25 பவுன் நகை மற்றும் ரொக்கப் பணம் ரூ.2 லட்சம் காணாமல் போயுள்ளது. அதே போல அதே மாவட்டத்தைச் சேர்ந்த பசுவராஜ்  வீட்டில் 3 பவுன் நகை மற்றும் 70 ஆயிரம் பணமும், வெங்கடேஷ் வீட்டில் 10 பவுன் நகையும், சரோஜா என்பவரின் வீட்டில் 7 பவுன் நகையும் காணாமல் போயுள்ளது. இப்படி ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்து நான்கு பேரின் வீடுகளில் கொள்ளை நடந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் மினி பஸ் சேவையில் சுணக்கம்… 70 பஸ்கள் வரை நிறுத்தம்!