Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் பலி

Advertiesment
டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் பலி
, செவ்வாய், 17 அக்டோபர் 2017 (11:05 IST)
தமிழகமெங்கும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்குவை கட்டுக்குள் கொண்டுவர அரசு போராடி வருகிறது. ஆனாலும் அரசு மருத்துவமனைகளில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் டெங்கு பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்தனர்.




இந்த நிலையில் டெங்கு காரணமாக 2 பேர் உயிரிழந்தனர். கரூர் ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்கிற காய்கறி வியாபாரி டெங்குவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கோவையில் உள்ள  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதே போன்று சேலத்தை சேர்ந்த இளைஞர் சபரீஷ் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த விவசாயி ஜான் பாஷா என்பவரும், ஈரோடு மாவட்டம், பா.நஞ்சகவுண்டம்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் பிரியா என்பவரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டாலினை விட எங்களுக்கு தமிழ்ப்பற்று அதிகம்: தமிழிசை