தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 39 பேர் பலியாகியுள்ளனர். இதனை தொடர்ந்து, அவர் சென்னை பனையூரில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பினார்.
இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். தமிழக வெற்றி கழக தொண்டர்கள் தொடர்ந்து அங்கு வந்துகொண்டிருப்பதால் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எந்தவித அரசியல் நோக்கத்தோடும் இந்த சம்பவத்தை அணுக மாட்டோம். ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது, ஆணையம் விசாரணை செய்யும். உண்மை வெளியானவுடன் அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிலளித்தார். முதலமைச்சரின் இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.