Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரியலூரில் ஒரே நாளில் 36 பேர் குணமடைந்து வீடு திரும்பல்!

Webdunia
செவ்வாய், 12 மே 2020 (07:36 IST)
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த மாவட்டங்களில் அரியலூரும் ஒன்றாக இருந்தது. அங்கு நேற்றுவரை 8 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சையில் 4 பேர் குணமாகி வீடு திரும்பினர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து அரியலூர் வந்தவர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. அதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக கிட்டதட்ட 2500 பேருக்கும் மேல் அரியலூரில் இருந்து கோயம்பேடு மாவட்டத்தில் வேலைப் பார்ப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் அரியலூருக்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கொரோன சோதனை மேற்கொள்ளப்படுகின்றனர்.

இதையடுத்து தற்போது வரை 308 பேருக்கு கொரோன தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மட்டும் 36 பேர் குணமாகிவிட்டதாக வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதில் 32 பேர் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து திரும்பி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு சத்து மாத்திரைக் கொடுத்து அரியலூர் மாவட்ட வட்டாட்சியர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments