Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா டிஸ்சார்ஜ் முறைகளில் மாற்றம் ஏன் ? மத்திய அரசு விளக்கம்!

Advertiesment
கொரோனா டிஸ்சார்ஜ் முறைகளில் மாற்றம் ஏன் ? மத்திய அரசு விளக்கம்!
, செவ்வாய், 12 மே 2020 (07:18 IST)
கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றவர்களை டிஸ்சார்ஜ் செய்யும் முறையை இப்போது மத்திய அரசு மாற்றி அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்கள் முழுவதுமாக குணமானப் பின்னரே பரிசோதனைகள் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் இப்போது மிகவும் லேசான அறிகுறி உள்ளவர்களை சிகிச்சை முடிந்து 10 நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யலாம் என்றும் மூன்று நாட்களுக்கு காய்ச்சல் இல்லாதவர்களையும் டிஸ்சார்ஜ் செய்யலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் லவ் அகர்வால் ‘ இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,917 ஆக அதிகரித்துள்ளது. அதாவது  31.15% ஆக உள்ளது. ஆய்வுகளில் கொரோனா அறிகுறி தெரிவதற்கு 2 நாட்களுக்கு முன்னரே வைரஸ் பாதிப்பு உச்சத்தை எட்டி அதன் பின்னான 7 நாட்களில் குறையும் என்று கூறியுள்ளன. இதையடுத்து பல நாடுகளும் டிஸ்சார்ஜ் முறையை மாற்றியுள்ளன. அறிகுறி மற்றும் சிகிச்சை எடுத்துக் கொண்ட நேரத்தைப் பொறுத்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். அதனால் இந்தியாவிலும் டிஸ்சார்ஜ் முறை மாற்றப்பட்டுள்ளது.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டு கைகள் இல்லாமல் வேலை செய்யும் இளைஞர்.. வைரலாகும் வீடியோ