காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 3500 கிலோ மீட்டர் நடைபயணம் செல்ல திட்டமிட்ட நிலையில் இந்த நடைப் பயணத்திற்கானஆலோசனை சென்னையில் நடத்தப்பட்டுள்ளது
2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடை பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார்
செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்க உள்ள இந்த நடைபயணம் கன்னியாகுமரியில் ஆரம்பித்து நாகர்கோவில், தக்கலை, களியக்காவிளை வழியாக கேரளா செல்கிறது. இதனையடுத்து நாடு முழுவதும் இந்த நடை பயணம் தொடர்கிறது
இந்த நிலையில் தமிழகத்தில் இந்த நடைப்பயணம் ஆரம்பமாக உள்ளதை அடுத்து காங்கிரஸ் தலைவர்கள் இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ஆலோசனை செய்தனர். நடை பயணத்திற்கு முன்னேற்பாடு, பாதுகாப்பு ஆகியவை குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி உள்பட நிர்வாகிகள் ஆலோசனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது