Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு;

32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு;

Mahendran

, ஞாயிறு, 7 ஜனவரி 2024 (18:05 IST)
தமிழ்நாட்டில் 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தர்வில் கூறியிருப்பதாவது: 
 
ராமநாதபுரம் எஸ்.பி தங்கதுரை கிருஷ்ணகிரி எஸ்.பியாக பணியிடமாற்றம். 
 
* மதுரை எஸ்.பி சிவபிரசாத் தேனி எஸ்.பியாக பணியிட மாற்றம். 
 
* தேனி எஸ்.பி டோங்கரே பிரவீன் ரமேஷ், மதுரை எஸ்.பியாக பணியிட மாற்றம்.
 
* காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகர் சென்னை பரங்கிமலை காவல் துணை ஆணையராக பணியிட மாற்றம்.
 
 * சென்னை பரங்கிமலை காவல் துணை ஆணையராக தீபக் விழுப்புரம் எஸ்.பி ஆக பணியிட மாற்ற்றம். 
 
* விழுப்புரம் எஸ்.பி ஷஷாங் சாய் சென்னை கியூ பிரிவு சிஐடி எஸ்.பியாக பணியிட மாற்றம்.
 
 * அரியலூர் எஸ்.பி பெரோஸ் கான் அப்துல்லா விருதுநகர் எஸ்.பியாக பணியிட மாற்றம். 
 
* கோவை வடக்கு துணை ஆணையர் சந்தீஷ் ராமநாதபுரம் எஸ்.பியாக பணியிட மாற்றம். 
 
* ஐஜி ஆர் தமிழ்சந்திரனுக்கு கூடுதல் டிஜியாக பதவி உயர்வு
 
 * மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு கூடுதல் டிஜிபியாக ஆர்.தமிழ்சந்திரன் நியமனம். 
 
* ஐபிஎஸ் அதிகாரி வி ஜெயஸ்ரீக்கு ஐஜியாக பதவி உயர்வு.
 
 * சென்னையில் காவல்துறை நடவடிக்கை பிரிவு ஐஜியாக ஜெயஸ்ரீ நியமனம்.
 
 * டிஐஜி சாமூண்டிஸ்வரிக்கு ஐஜியாக பதவி உயர்வு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக சாமூண்டீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். 
 
* ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி எஸ்.லட்சுமி சென்னையில் ஆயுதப்படை பிரிவு ஐஜியாக நியமனம். 
 
* ஐஜியாக பதவி உயர்வு பெற்ற எஸ்.ராஜேஸ்வரி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் - செயலாளராக நியமனம். 
 
* ஐஜியாக பதவி உயர்வு பெற்ற எஸ்.ராஜேந்திரன் ஆவடியில் தலைமையக போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமனம். 
 
* ஐஜியாக பதவி உயர்வு பெற்ற எஸ்.எம் முத்துசாமி, தமிழ்நாடு காவல் பயிற்சி கல்லூரியின் கூடுதல் இயக்குனராக நியமனம்.
 
 * ஐஜியா பதவி உயர்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மயில் வாகனன் சென்னை அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமனம். 

 
* சரஜோகுமார் தக்கூர் ஐபிஎஸ் வேலூர சரக டிஜிபியாக நியமனம்.
 
 * சென்னை தெற்கு போக்குவரத்து காவல் துணை ஆணையர் மகேஸ்குமார் பதவி உயர்வு பெற்று இணை ஆணையராக நியமனம். 
 
* பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள தேவராணி, சென்னை வடக்கு போக்குவரத்து காவல் இணை ஆணையராக நியமனம். 
 
* காவல் கண்காணிப்பாளராக உள்ள ஆர். திருநாவுக்கரசு பதவி உயர்வு பெற்று உளவுப்பிரி டிஐஜியாக நியமனம். 
 
* ஜி.ராமர் ஐபிஎஸ் சென்னையில் ரயில்வே டிஜிபியாக நியமனம்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் காலை முதல் விடாமல் பெய்யும் மழை.. புறநகர் பகுதிகளிலும் மழை..!