அன்புச்செழியன் வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் சிக்கிய பணம் தமிழகத்தின் முக்கியதற்களுடையது என முத்தரசன் பேசியுள்ளார்.
பிகில் பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்களில் வீடுகளில் ஒரே நேரத்தில் சுமார் 20 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதோடு சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களிலும் ரெட்டு நடைபெற்றது.
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களில் இருந்து ரூ.65 கோடி பறிமுதல் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அன்புச்செழியன் சென்னை வீட்டில் இருந்து 50 கோடியும், மதுரை வீட்டில் இருந்து 15 கோடியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கணக்கில் மறைத்த 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், அடமான பத்திரங்கள், காசோலைகள் சிக்கியதாக கூறப்படுகிறது. பிகில் பட வசூல் மட்டுமின்றி, ஏராளமான திரைப்படங்களில் செய்துள்ள முதலீடு, வசூல் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆம், லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வெளியிட்ட 2.0, தர்பார் ஆகிய திரைப்படங்களுக்கு அன்புச்செழியன் பைனான்ஸ் செய்துள்ளார். சுமார் 100 கோடி ரூபாயை லைக்கா நிறுவனத்திற்கு அன்புச்செழியன் கொடுத்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அன்புச்செழியன் வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் சிக்கிய பணம் தமிழகத்தில் உயர் பதவியில் உள்ள ”ப” என்ற எழுத்துக்கு சொந்தமானவர் பணம், மேலும் அதற்கு அடுத்து உள்ள ”உ” என்ற எழுத்துக்கு சொந்தமானவர் பணம் என சொல்லப்படுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.