அரியலூர் மாவட்டத்தில் செந்துரை அருகே உள்ள கீழ்மாளிகை தெருவில் வசிப்பவர் ராமு(60). இவரது மனைவி அசலாம்பாள். இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்தமகன் )30).அருள் (26). ஆனால் கணவன் - மனைவி இருவரும் கடந்த 30 ஆண்டுகளாகப் பேசிக்கொள்வதில்லை.
இந்நிலையில்சமீபத்தில் கீழ்மாளிகையில் கோயில் திருவிழா நடந்தது. அதில் ஆட்டம் , பாட்டம் எல்லாம் பார்த்துவிட்டு வந்த ராமு வீட்டுக்கு சந்து ஓய்ந்து படுக்கையில் படுத்தார்.
அந்த நேரம் பார்த்து அசலாம்பாள், வீட்டில் இருந்த கட்டையை எடுத்து உறங்கிக் கொண்டிருந்த ராமுவை அடித்தார். அந்த அடியில் ராமு ரத்த வெள்ளத்தில் கண் விழிக்காமலேயே இறந்தார்.
பின்னர் அங்கிருந்த கோயிலுக்கு சென்றவர், சாமிக்குச் சூடமேற்றி..என்னுடைய 30 வருட பகையை முடித்துவிட்டேன் என்று கூறியவாறி அழுத்துள்ளார்.
ஊர்மக்கள் அசலாம்பாளின் செயலைப் பார்த்தவர்கள், அவருடைய வீட்டுக்குச் சென்று பார்த்தனர். அப்போது ராமுல் வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார்.
இதுகுறித்து போலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸார் ரமுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதையடுத்து அசலாம்பாளை கைதுசெய்த போலீஸார் ஜெயகொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி லால்குடியில் உள்ள மகளிர் சிறையில் அடைத்தனர்.
30 வருடமாக மனதில் வைத்திருந்த பகையை, தன் கணவனை கொன்று தீர்த்து முடித்துக்கொன்ற அசலாம்பாள் இதற்குக் கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை என்பதுதான் எல்லோரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது.