Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஜெயலலிதா முகம் பார்க்க இன்னும் மூன்று மாதம் ஆகுமாம்?

முதல்வர் ஜெயலலிதா முகம் பார்க்க இன்னும் மூன்று மாதம் ஆகுமாம்?

Webdunia
புதன், 9 நவம்பர் 2016 (14:56 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் இன்று வரை அவரை காண தவியாய் தவிக்கின்றனர் அதிமுகவினர்.


 
 
தமிழகத்தில் பல தரப்பினரும் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட கோரிக்கை வைத்தனர். ஆனால் இன்று வரை மருத்துவமனையில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் அவரின் முகத்தை தமிழக மக்கள் பார்க்க இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என்ற தகவல் வருகிறது.
 
47 நாட்களாக மருத்துவமனையில் இருக்கும் முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுகிறது என கூறுகிறார்கள். ஆனால் எந்த மாதிரியான முன்னேற்றம் என்று கூறப்படவில்லை. இன்னும் ஒரு மாதகாலம் ஜெயலலிதா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுப்பார் என கூறப்படுகிறது.
 
அதன் பின்னர் சிறுதாவூர் பங்களாவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்ற தகவல் வருகிறது. இதனால் அவரது சிகிச்சை முழுமையாக முடிவடையாத நிலையில் அவரது புகைப்படத்தை வெளியிட வாய்ப்பில்லாததால் அதனை வெளியிட இன்னும் 3 மாதமாகும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க கமலா ஹாரிஸ் அடுத்த தடவை ஜெயிப்பாங்க! - துளசேந்திரபுரம் கிராம மக்கள் உறுதி!

சட்டமன்றத்தில் அமளி: குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்ட பாஜக எம்.எல்.ஏக்கள்..!

இதுகூட தெரியவில்லையா? அப்டேட் இல்லாமல் இருக்கிறார் சீமான்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

திருச்செந்தூரில் கந்தசஷ்டி: நீண்ட வரிசையில் பக்தர்கள்.. கடற்கரையில் பெருங்கூட்டம்..!

பிற்பகல் 1 மணி வரை வெளுத்து கட்டப்போகும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

அடுத்த கட்டுரையில்
Show comments