Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் மர்ம மரணமடைந்த 5 தமிழர்களுக்கு தலா 3 லட்சம் நிதியுதவி; தமிழக அரசு

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (09:38 IST)
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஒண்டிமிட்டா ஏரியில் தமிழகத்தை சேர்ந்த 5 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த முருகேசன், ஜெயராஜ், கருப்பண்ணன், சின்னப்பையன், முருகன் ஆகியோர் ஆந்திராவுக்கு வேலைக்கு சென்றிருந்தனர். நேற்று முன்தினம் இவர்கள் ஐவரும் ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஒண்டிமிட்டா ஏரியில் சடலமாக மிதந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இவர்களின் உடல்களை மீட்டனர்.
 
இந்நிலையில் வழக்கறிஞர் சிவா என்பவர் இவர்களின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், 5 அடி ஆழமே இருக்கும் ஏரியில் இவர்கள் இறக்க வாய்ப்பிலை என கூறியிருக்கிறார். இவர்களை வேலைக்கு அழைத்து சென்றவர்கள் அல்லது போலீஸார் தான் ஐவரையும் கொன்றிருக்க வாய்ப்பிருப்பதாக கூறினார். இவர்கள் சாவில் மர்ம இருப்பதால் உரிய நீதி விசாரணை வேண்டும் என மனு அளித்திருக்கிறார்.
 
இந்நிலையில் ஆந்திராவில் மர்ம மரணமடைந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா 3 லட்சம் நிதியிதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
தமிழர்கள் ஆந்திராவில் மர்ம மரணமடைவது வாடிக்கையாகி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் 20 தமிழர்களை ஆந்திர போலீஸார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments