நெல்லை, நாமக்கல், கோவை வடக்கு ஆகிய 3 மாவட்டச் செயலாளர்களை மாற்றி திமுக தலைமை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மேற்கு மாவட்டச்செயலாளர் பெ.கி.துரைராஜ் மாவட்டச் செயலாளர் பதவியில் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக, சிவ.பத்மநாபன் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாநகர் வடக்கு மாவட்டச்செயலாளர் எம்.வீரகோபால் அவர்களுக்கு பதிலாக மு.முத்துசாமியை மாவட்டப் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் கிழக்கு மாவட்டச்செயலாளர் செ.காந்திசெல்வன் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பார்.இளங்கோவன் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.