ஒரு மழலை குழந்தையின் பேச்சைக் கேட்டு, குஜராத் முதல்வர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
குஜராத் மாநிலம், கேதா மாவட்டத்தில் ஹீரஞ்ச் என்ற கிராமத்தில் பள்ளி குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவி விழா முதல்வர் ஆனந்தி பென் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், 4 ஆம் வகுப்பு மாணவி அம்பிகா கோயல், பெண் சிசுக் கொலை குறித்து உணர்ச்சி மிகு உரையாற்றி பலரையும் நெகிழ வைத்தார்.
அப்போது, அந்தக் குழந்தை, தனது தாய்க்கு கருக்கலைப்புக்கு உள்ளான ஒரு பெண் குழந்தை கற்பனை கடிதம் எழுதியது போல அந்த சிறுமி அம்பிகா உணர்ச்சிகரமாக பேசி முடித்தாள்.
இதைக் கேட்ட, முதல்வர் ஆனந்தி பென் கண்களில் இருந்து கண்ணீர் பீறிட்டு வெளியானது. ஆனந்த கண்ணீரோடு, அந்த குழந்தை அம்பிகாவை அருகில் அழைத்து அப்படியே அணைத்துக் கொண்டார். மேலும், அந்த சிறுமிக்கு ஆப்பிள் பழத்தை பரிசாக கொடுத்து மகிழ்ந்தார்.