Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளுக்கு சீர்வரிசை கொடுத்துவிட்டு திரும்பிய தந்தை விபத்தில் பலி

திருமணம்
Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (17:25 IST)
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தனது மகள் ஈஸ்வரி என்பவருக்கு ஆசை ஆசையாய் சமீபத்தில் பிரமாண்டமாக செய்து வைத்தார். இந்த நிலையில் இன்று மணமகள் மற்றும் மணமகனை மாப்பிள்ளை அழைப்பு அழைத்து விருந்து வைத்து சீர் வரிசையுடன் மீண்டும் மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து சென்றார்.

பின்னர் முருகன் தனது உறவினர்களுடன் தனது வீட்டிற்கு காரில் திரும்பி கொண்டிருந்தபோது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் சிக்கி பலியானார். அவருடன் மேலும் இருவர் பலியாகியதோடு ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து மானூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருமணம் முடிந்து மகளை அவருடைய கணவர் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டுத் திரும்பியபோது மணமகளின் தந்தை உயிரிழந்த சம்பவம் மணவீட்டாரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தையின் மரண செய்தி கேட்டு கதறி அழுத ஈஸ்வரிக்கு ஆறுதல் கூட சொல்ல முடியாமல் அவருடைய உறவினர்கள் திகைத்து நின்ற காட்சி கல்நெஞ்சையும் கரைய வைக்கும் அளவில் இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments