Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூடியூப் சேனலை உருவாக்குதல் குறித்த 3 நாள் பயிற்சி வகுப்பு

Sinoj
சனி, 20 ஜனவரி 2024 (21:08 IST)
உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ் நாடு  அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்கம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 
 
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வரும் 29.01.2024 முதல் 31.01.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
 
இப்பயிற்சியில் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம். சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு - ஆன்லைன் மார்க்கெட்டிங் - மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம் இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.
 
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை. பார்த்தசாரதி கோயில் தெரு. இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032. 44-22252081/22252082, 8668102600/86681 00181/7010143022. முன்பதிவு அவசியம்: அரசு சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

2வது நாளாக தங்கம் விலை உயர்வு.. மீண்டும் ரூ.54,000ஐ நெருங்கிய சவரன்..!

16 வயது சிறுமியுடன் நடந்து சென்ற இளைஞரை வழிமறித்த கும்பல்.. வீடுபுகுந்து வெட்டியதால் அதிர்ச்சி..!

பாலியல் புகாரில் சிக்கிய பூசாரி கைது.. கொடைக்கானலில் தலைமறைவாக இருந்ததாக தகவல்..!

தனியார் பள்ளிகளில் கட்டாய இலவச கல்வி சட்டம்: ஆயிரக்கணக்கில் குவிந்த விண்ணப்பங்கள்..!

ஒரே ஹோட்டலில் சாப்பிட்ட 178 பேர் உடல்நலம் பாதிப்பு.. பெண் உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments