தமிழகத்தில் இன்று 2865 பேருக்கு கொரோனா பாதிப்பு: சென்னையில் உச்சபட்சம் என்பதால் பதட்டம்

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (19:02 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 2865 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 67,468 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இன்று இன்று 8வது நாளாக கொரோனா பாதிப்பு 2000ஐ விட அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 2865 பேர்களில் 1654 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45,814 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று 1600க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 33 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 866 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 2424 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதால் கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 37,763  என உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று தமிழகத்தில் 29,655  பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 976,431 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் நடந்த அமலாக்கத்துறை சோதனை.. கைப்பற்றப்பட்ட பணம், நகை எவ்வளவு?

2 நாட்கள் உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

இன்று ஒரே நாளில் 300 ரூபாய்க்கும் மேல் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

பெங்களூரு டிராபிக்கில் பயணம் செய்வதை விட விண்வெளியில் பயணம் செய்வது எளிது: விண்வெளி வீரர் கிண்டல்

இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: சென்னையில் 6 பேர் இளைஞர்கள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments