Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழு கொள்ளவை எட்டிய 272 ஏரிகள்: மீதமுள்ளவற்றின் நிலை என்ன?

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (09:36 IST)
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள சுமார் 272 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளன. 

 
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி இரண்டு நாட்களாக விடாமல் பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் கனமழை பெய்து நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் பல பகுதிகளில் மழை நீர் வடியாமல் பல இடங்களில் வெள்ளக் காடாக மாறியுள்ளது.
 
கனமழை காரணமாக தமிழகத்தின் நீர்நிலைகள் நிரம்ப ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள சுமார் 272 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளன. ஆம், காஞ்சிபுரத்தில் உள்ள 138 ஏரிகளும், செங்கல்பட்டில் உள்ள 89 ஏரிகளும், திருவண்ணாமலையில் 44 ஏரிகளும் அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளன.
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 138 ஏரிகள் 100 சதவிகிதமும், 88 ஏரிகள் 75 சதவிகிதமும், 48 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன. 
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் 89 ஏரிகள் 100 சதவிகிதமும், 99 ஏரிகள் 75 சதவிகிதமும்,140 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன. 
 
திருவண்ணாமலை மாவட்டத்தில் 44 ஏரிகள் 100 சதவிகிதமும், 11 ஏரிகள் 75 சதவிகிதமும், 34 ஏரிகள் 50  சதவிகிதமும் நிரம்பியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments