பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

Mahendran
வியாழன், 15 மே 2025 (16:19 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் பலியாகிய நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி என்ற பகுதியில், அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன. அண்ணாமலையின் நண்பர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் இந்த பிறந்த நாள் விழாவுக்கு வந்திருந்தனர். அவர்களில் பலர் விருந்தில் சாப்பிட்டனர்.
 
இந்த நிலையில், பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அருகிலுள்ள மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது வரை 27 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும், சிகிச்சை பெற்று வந்த கருப்பையா என்பவர் உயிரிழந்ததாகவும், இது குறித்து புதுக்கோட்டை ஆர்.டி.ஓ., வட்டாட்சியர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உணவில் ஏதாவது கலந்ததா என்பது தொடர்பாகவும் ஆய்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments