Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

26,000 ஆசிரியர்கள் பணி நீக்கம் என தீர்ப்பு: ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு ஆதரவு..!

Advertiesment
26,000 ஆசிரியர்கள் பணி நீக்கம் என தீர்ப்பு: ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு ஆதரவு..!

Siva

, புதன், 24 ஏப்ரல் 2024 (08:43 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் 26 ஆயிரம் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இந்த உத்தரவுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப 25,753 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் இது இதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் இது குறித்த வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக விசாரணை நடைபெற்றது

இந்த விசாரணையின் முடிவில் சட்டவிரோதமாக பணி நியமனம் செய்யப்பட்ட 25,753 ஆசிரியர்கள் நியமனம் ரத்து செய்யப்படுவதாகவும் அவர்கள் இதுவரை பெற்ற சம்பளம் சலுகைகள் ஆகியவற்றை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது

இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார். ஆனால் ஆசிரியர் சங்கங்கள் இந்த தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயநாடு சந்தேகம் தான்.. அமேதியிலும் போட்டியிடும் ராகுல் காந்தி.. ஏற்பாடுகள் தயார்..!