Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அட்சய திருதியை தினத்தில் தங்கம் தானே வாங்கணும்.. 250 பவுன் கொள்ளையடித்த திருடன்..!

robbery

Mahendran

, சனி, 11 மே 2024 (14:11 IST)
அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கினால் அதிக தங்கம் சேரும் என்று ஐதீகமாக இருக்கும் நிலையில் நேற்று ஏராளமானோர் நகைக்கடைக்கு சென்று தங்கம் வாங்கினார்கள். ஆனால் ஒரு திருடன் அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்க வேண்டும் என்பதற்காக பெண் காவல்துறை ஆய்வாளரின் வீட்டில் திருடியதாகவும் அந்த திருடன் திருடிய நகைகளின் மதிப்பு சுமார் 2 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது 
 
மதுரை அலங்காநல்லூர் அருகே மீனாட்சி நகர் என்ற பகுதியைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் திண்டுக்கல் அருகே காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருவதாக கூறப்படும் நிலையில் நேற்று காலை அவர் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்று உள்ளார்
 
மீண்டும் பணி முடிந்து வீடு வந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து இருந்ததாகவும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து நகைகள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 250 சவரன் நகை கொள்ளை போனதாகவும் 5 லட்ச ரூபாய் ரொக்க பணத்தையும் காணவில்லை என்றும் புகார் அளித்துள்ளார் 
 
இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியும் ஆய்வு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மசாஜ் சென்டர்களில் வேலை பார்த்தார்களா நடிகைகள், கல்லூரி மாணவிகள்? அதிர்ச்சி தகவல்..!