Publish Date: Fri, 09 Dec 2022 (15:32 IST)
Updated Date: Fri, 09 Dec 2022 (15:34 IST)
புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக மேலும் 25 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக இன்று இரவு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் பேருந்து சேவை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் எழு விமானங்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து தூத்துக்குடி, கொழும்பு, கடப்பா, மும்பை மீண்டும் அங்கிருந்து சென்னை திரும்பும் விமானங்கள் சேவை ரத்தாகியுள்ளது.
பயணிகளின் வருகை பொருத்தும், சென்னையில் புயலின் தாக்கத்தை பொருத்தும் மேலும் சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட வாய்ப்புள்ளதாக தெரிகிறது என சென்னை விமான நிலையம் அறிவிப்பு. அறிவித்ததை போன்று மேலும் சில விமானங்கள் ரத்தாகியுள்ளது.
ஆம், இருந்து மேலும் 25 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி, மைசூர், கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, திருச்சி, மதுரை, ஐதராபாத், ஹீப்ளி, கண்ணூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது என அறிவிப்பு.
Sugapriya Prakash
Publish Date: Fri, 09 Dec 2022 (15:32 IST)
Updated Date: Fri, 09 Dec 2022 (15:34 IST)