Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவினாசி லிங்கேஸ்வர் கோவிலில் வரும் 24 ஆம் தேதி திருப்பணி- கோவில் நிர்வாகம்

Advertiesment
avinashi
, புதன், 22 மார்ச் 2023 (23:38 IST)
அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வர் கோவிலில் வரும் 24 ஆம் தேதி திருப்பணி தொடங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவில் ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்ற தலமாகவும், காசிக்கு நிகரான  கோவில் என்று கூறப்படுகிறது.

நாயன்மார்களில் ஒருவரான   நாயனார் பதிகம் பாடிய சிறப்பு பெற்ற தலமிது.

இந்த நிலையில், இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 14 ஆண்டுகள் ஆகிறது.எனவே திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அற நிலையத்துறை முடிவு செய்துள்ளது.

வரும் 24 ஆம் தேதி காலை 7 மணிக்கு அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருப்பணி தொடக்க விழா நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாய்க்காலில் செத்து மிதக்கும் மீன்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!