Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான ஒரே வாரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்: தென்காசியில் பரபரப்பு

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (14:46 IST)
திருமணம் ஆன ஒரே வாரத்தில் இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தென்காசி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நெல்லை மாவட்டம் கடையம் என்ற பகுதியைச் சேர்ந்த இசக்கிலட்சுமி என்ற இளம் பெண்ணுக்கு கடந்த ஒன்றாம் தேதி திருமணம் நடக்க இருந்தது. ஆனால் திருமணத்திற்கு முந்தைய நாள் அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவருடன் இசக்கிலட்சுமி ஓடிவிட்டதால் திருமணம் நின்று போனது 
 
இந்த நிலையில் ராம்குமார் இசக்கிலட்சுமி  திருமணம் செய்து சென்னையில் வாழ்ந்த நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனை அடுத்து இசக்கி லட்சுமி தனது சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார்
 
இந்த நிலையில் நேற்று இசக்கிலட்சுமி தனது உறவினர் வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவருடைய கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை வாகன ஓட்டிகளே..! இனி 5 வித விதிமீறல்களுக்கு அபராதம்! - போக்குவரத்து காவல்துறை உத்தரவு!

மே மாதத்திலேயே வேகமாக நிறையும் மேட்டூர் அணை!? காவிரியில் 14 ஆயிரம் கன அடி நீர்வரத்து!

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! இந்த ஆண்டு செம மழை! - வானிலை ஆய்வு மையம்!

48 மணி நேரத்தில் 15 ஆயிரம் குழந்தைகள் சாகப் போகிறார்கள்! காசாவை காப்பாற்றுங்கள்! - ஐ.நா வேண்டுகோள்!

சீனா சென்ற பாகிஸ்தான் துணை பிரதமர்.. வரவேற்க ஆளே இல்லாமல் அவமரியாதை..!

அடுத்த கட்டுரையில்
Show comments