மது அருந்தி விட்டு சிக்கன் பிரைடு சாப்பிட்ட இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வியாசர்பாடி என்ற பகுதியைச் சேர்ந்த 21 வயது மகாவிஷ்ணு என்பவர் தனது நண்பரின் பிறந்த நாளை கொண்டாடியபோது மது அருந்தியதாக தெரிகிறது
மது அருந்திய பின்னர் அவர் சிக்கன் பிரைடு ரைஸ் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு சென்று உள்ளார். அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்துவிட்டார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
முதல் கட்ட விசாரணையில் மகாவிஷ்ணு நேற்று இரவு தனது நண்பனின் பிறந்த நாள் பார்ட்டியில் மது அருந்தி விட்டு அதன்பின் சிக்கன் ரைஸ் சிக்கன் சாப்பிட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து சிக்கன் பிரைடு ரைஸ் தயாரித்த உணவகத்திலும் விசாரணை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது
நண்பனின் பிறந்த நாளை கொண்டாடி விட்டு தூங்கிய மகாவிஷ்ணு எழுந்திருக்காமல் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.