Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் இரண்டின் விலையும் குறைவு: மக்கள் மகிழ்ச்சி

Webdunia
ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (07:02 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து கொண்டே வருவதை அடுத்து தமிழகம் உள்பட இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பின் படி இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதாக சற்றுமுன்னர் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை 15 காசுகள் குறைந்து லிட்டர் விலை ரூபாய் ரூ.99.32 என விற்பனையாகி வருகிறது. அதே போல் இன்று டீசல் விலை 18 காசுகள் குறைந்து லிட்டர் விலை ரூபாய் ரூ.93.66 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சமீபத்தில் தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்டில் பெட்ரோலுக்கான வரி ரூபாய் மூன்று குறைந்ததை அடுத்து 100 ரூபாய்க்குள் பெட்ரோல் விலை உள்ளது. இந்த நிலையில் இன்று மேலும் 15 காசுகள் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments