Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 28 February 2025
webdunia

உக்ரைனில் இருந்து இன்னும் எத்தனை தமிழக மாணவர்கள் மீட்கப்பட்ட வேண்டும்?

Advertiesment
உக்ரைனில் இருந்து இன்னும் எத்தனை தமிழக மாணவர்கள் மீட்கப்பட்ட வேண்டும்?
, புதன், 2 மார்ச் 2022 (16:03 IST)
உக்ரைனில் இருந்து இதுவரை 139 தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

 
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு “ஆப்ரேஷன் கங்கா” திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று உக்ரைனில் ரஷ்யா நடத்திய குண்டு வீச்சில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் உக்ரைனில் இருந்து இதுவரை 139 தமிழக மாணவர்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்னும் 2,084 தமிழக மாணவர்கள் உக்ரைனில் உள்ளனர் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மார்ச் 9 ஆம் தேதி வரை இயக்கப்படும் சிறப்பு விமானங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவின் தேசியகொடியை பயன்படுத்திய பாகிஸ்தான் மாணவர்கள்