Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை முதல் +2 தற்காலிக மதிப்பெண் பட்டியல் பெற்றுக் கொள்ளலாம்!

நாளை முதல் +2 தற்காலிக மதிப்பெண் பட்டியல் பெற்றுக் கொள்ளலாம்!
, புதன், 18 மே 2016 (11:35 IST)
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு செவ்வாயன்று (மே 17) வெளியானதை அடுத்து தற்காலிக மதிப்பெண் பட்டியல் வியாழனன்று (மே 19) முதல் கிடைக்கும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
 

 
பிளஸ்–2 தேர்வு முடிவு நேற்று 17-05-16 செவ்வாயன்று வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வு எழுதிய 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு முடிவு அறிந்தனர். மாணவர்கள் உயர் கல்விக்கு உடனடியாக விண்ணப்பிக்க வசதியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கடந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
 
பதிவிறக்கம் செய்தோ அல்லது தாங்கள் படித்த பள்ளியில் இருந்தோ தலைமை ஆசிரியர் கையெழுத்திட்டு பெற்றோ உயர்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். அசல் மதிப்பெண் பட்டியல் விநியோகம் செய்த பிறகு அதனை கொண்டு கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம்.
 
மாணவர்கள் உயர் படிப்புக்கு விண்ணப்பிக்க தடை ஏற்படக் கூடாது என்பதற்காக தற்காலிக சான்றிதழ் விநியோகம் செய்யப்படுகிறது. தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண் விவரங்களை அறிந்த மாணவ - மாணவிகள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 19ம் தேதி முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
பள்ளிகளில் 21ஆம் தேதி முதல் தலைமை ஆசிரியர் கையெழுத்து மற்றும் முத்திரையுடன் பெற்றுக் கொள்ளலாம். http://www.dge.tn.nic.in/ என்ற இணைய தளம் மூலமாக மாணவர்கள் தற்காலிக சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாஷாவை நாங்கள்தான் கொலை செய்தோம் : வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்