ஒசூர், நாகர்கோவிலை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்டமசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
	
	 
	தமிழகத்தில் ஏற்கனவே 32 மாவட்டங்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை அறிவித்தார்
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
	 
	இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் நகராட்சியாக இருந்த ஒசூர் மற்றும் நாகர்கோவிலை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்டமசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதனை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தாக்கல் செய்ய இருக்கிறார். ஏற்கனவே தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய 12 மாநகராட்சிகள் இருக்கும் நிலையில் ஒசூர், நாகர்கோவிலை சேர்த்து இனி 14 மாநகராட்சிகள்.