Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

19 வயதில் துறவறம்; நடனமாடி வரவேற்ற பெண்கள்

Advertiesment
19 வயதில் துறவறம்; நடனமாடி வரவேற்ற பெண்கள்
, திங்கள், 18 டிசம்பர் 2017 (16:19 IST)
கோவையில் தொழிலதிபர் மகன் ஒருவர் 19வயதில் துறவறம் பூண்டுள்ளார். அவரை ஜெயின் சமூக பெண்கள் நடனமாடி உற்சாகமாக வரவேற்றனர்.

 
கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு சம்பந்தம் ரோடு பகுதியை சேர்ந்த மனோஜ் ஜெயின் என்ற தொழிலதிபரின் மகன் நிமிட்ஸ்(19). இவர் ஜெயின் சமூகப்படி குருகுல கல்வி பயின்றார். குஜராத் மாநிலத்தில் குருகுல கல்வி பெற்றார். 
 
பின்னர் கோவை திரும்பிய நிமிட்ஸ் துறவறம் பூண்டார். இந்த நிகழ்ச்சியை ஜெயின் கோயில் சந்திர விஜய் சூரி மகராஜ் ஆச்சாரியா நடத்தினர். நிமிட்ஸ் அலங்கரிக்கப்பட்ட குதிரையில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். ஊர்வலத்தில் ஜெயின் சமூக பெண்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடியபடி தெருக்களில் சென்றனர்.
 
இந்த நிகழ்ச்சி நேற்று கோவையில் நடைபெற்றது. வருகிற 27ஆம் தேதி நிமிட்ஸ் சூரத்தில் துறவறம் மேற்கொள்கிறார். கோவையில் இதுவரை ஜெயின் சமூகத்தை சேர்ந்த பெண்கள் தான் துறவறம் பூண்டுள்ளனர். தற்போது 19 வயது இளைஞர் துறவறம் பூண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கற்பழித்து சாலையில் வீசப்பட்ட இங்கிலாந்து பெண் தூதர்!