Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிஐஜிக்கள், எஸ்பிக்கள் என 19 காவல் உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு..!

டிஐஜிக்கள், எஸ்பிக்கள் என 19 காவல் உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு..!
, செவ்வாய், 2 ஜனவரி 2024 (15:40 IST)
19 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் 7 பேர் டிஐஜி பதவியிலும்  10 பேர் எஸ்பி பதவிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை செயலர் பி.அமுதா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
 ஐபிஎஸ் அதிகாரிகள் ஆனந்த் குமார் சோமானி, ஆர்.தமிழ்சந்திரன் ஆகிய 2 பேரும் ஐஜி பதவியில் இருந்து கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 
 
ஐபிஎஸ் அதிகாரிகள் வி.ஜெயா, பி.சாமுண்டீஸ்வரி, எஸ்.லட்சுமி, எஸ்.ராஜேஸ்வரி, எஸ்.ராஜேந்திரன், எம்.எஸ்.முத்துசாமி, மயில்வாகணன் (2006 பிரிவு) ஆகிய 7 பேர் டிஐஜி பதவியில் இருந்து ஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
 
ஐபிஎஸ் அதிகாரிகள் பி.ஆர்.வெண்மதி, பி.அரவிந்தன், வி.விக்ரமன், சரோஜ்குமார் தாகூர், டி.மகேஷ்குமார், என்.தேவராணி, இ.எஸ்.உமா, ஆர்.திருநாவுக்கரசு, ஆர்.ஜெயந்தி,ஜி.ராமர் ஆகிய 10 பேரும் எஸ்.பி பதவியில் இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எலி கடித்ததால் திரும்ப எலியை கடித்த கல்லூரி மாணவி.. மருத்துவமனையில் அனுமதி..!