Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த 19 மாவட்டங்களில்… 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (08:34 IST)
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தகவல்.


சென்னையிலிருந்து 670 கிலோ மீட்டர் தொலைவில் மாண்டோஸ் புயல் மையம் கொண்டுள்ளதாகவும் நாளை இரவு மாண்டோஸ் புயல் ஸ்ரீஹரிக்கோட்டா மற்றும் புதுவை இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மிக மிக பலத்த மழை பெய்யும் என்றும் இதனால் சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இதனைத்தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதோடு அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் காலை 10 மணி வரை மழை இருக்க கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி மாநில பட்ஜெட்.. பெண்கள் பாதுகாப்புக்கு மட்டும் ரூ.5100 கோடி ஒதுக்கீடு..!

1 மணி நேரத்தில் 8 இடங்களில் நகைப்பறிப்பு! விமான நிலையத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்!

இந்தியாவும் சீனாவும் தேர்தலில் தலையிடலாம்: கனடா உளவுத்துறை எச்சரிக்கை..!

சிவசேனாவின் உண்மை முகத்தை பாக்கப்போற நீ..! - குணால் கம்ராவுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ஐகோர்ட் நீதிபதிகள் திடீர் விலகல்! பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments