கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது போடப்பட்ட 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி செய்து வந்த போது, அப்போதைய முதல்வரின் செயல்பாடுகளை விமர்சித்தது, டெண்டர் முறைகேடு, உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்த கருத்து தெரிவித்ததாக மு.க.ஸ்டாலினுக்கு எதிராக 2016 முதல் 2021 வரை முதலமைச்சருக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறியதாக அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, முந்தைய ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெற அரசாணை பிறப்பித்தது. இதன் அடிப்படையில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது 18 அவதூறு கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டிருந்த நிலையில் அந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து தற்போது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.