Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சையில் மேலும் 17 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (08:40 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்பதும் கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது குறிப்பாக சென்னையில் தினமும் 400 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் தஞ்சை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள பள்ளிகளில் கடந்த சில நாட்களாக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா மிக வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளிவந்தன 
 
இந்த நிலையில் தற்போது தஞ்சையில் உள்ள பள்ளிகளில் மேலும் 17 மாணவ மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளில் 168 மாணவ மாணவியருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 17 மாணவ மாணவிகளுக்கு கொரோனா உறுதியான தான் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 12 பேர் பள்ளி மாணவ மாணவிகள் என்பதும் 5 பேர் கல்லூரி மாணவர்கள் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்.. என்ன காரணம்?

தனுஷ்கோடிக்கு செல்ல தடை.. ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்

2024–25-ம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ-யில் தமிழ் பாட தேர்வு கட்டாயம்: பள்ளி கல்வித்துறை தகவல்

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

அந்த பத்து பேருக்கு.. பங்கம் செய்தார் அண்ணாமலை.. நடிகை கஸ்தூரி ட்விட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments