Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே பைக்கில் சென்ற 4 இளைஞர்கள் சாலை விபத்தில் பரிதாப மரணம்!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (08:39 IST)
ஒரே பைக்கில் சென்ற 4 இளைஞர்கள் சாலை விபத்தில் பரிதாப மரணம்!
அவிநாசி அருகே இன்று அதிகாலை ஒரே பைக்கில் நான்கு இளைஞர்கள் சென்ற நிலையில் அந்த பைக் திடீரென விபத்துக்குள்ளாகி பைக்கில் சென்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இன்று அதிகாலை அவிநாசி அடுத்த ஈட்டிவீரம்பாளையம் பைபாஸ் சாலையில் ஒரே பைக்கில் 4 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது நின்று கொண்டிருந்த லாரி மீது அந்த பைக் எதிர்பாராத விதமாக திடீரென மோதியது 
 
இதனை அடுத்து நான்கு பேர்களும் தூக்கி வீசப்பட்டதாகவும் அவர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்ததாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியினர் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்த நிலையில் ஆம்புலன்ஸ் வருவதற்குள் நான்கு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் பலியான 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் 4 பேரை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் இருப்பதாகவும் படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவின் தியான்ஜின் நகரில் பிரதமர் மோடி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பு

சென்னை விமான நிலையத்தில் திடீர் சோதனை செய்யும் சிபிஐ அதிகாரிகள்.. என்ன காரணம்?

ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிடாமல் தடுக்க, பாலஸ்தீன அதிபரின் விசாவை ரத்து செய்தது அமெரிக்க அரசு!

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. ரூ.70 முதல் ரூ.395 அதிகம் என தகவல்..!

விஜய் பேசுவதை கண்டுகொள்ளாதீர்.. தொண்டர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments