Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 வயது சிறுமி பரிதாப மரணம், இனியாவது டாஸ்மாக்கை மூடுங்கள்: ராமதாஸ் வேண்டுகோள்..!

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (07:18 IST)
தமது தந்தையின் குடிப்பழக்கத்தால் 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இனியாவது டாஸ்மாக்கை மூடுங்கள் என பாமக தலைவர் ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
குடி குடியைக் கெடுக்கும் என்பதற்கு வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சின்னராஜாகுப்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி விஷ்ணுப்பிரியாவின்  தந்தையின்  குடிப்பழக்கம் தான் சான்று.  
 
கூலித்தொழிலாளியான தமது தந்தையின் குடிப்பழக்கத்தால் தமது குடும்பத்தின் நிம்மதி குலைந்ததை தாங்கிக் கொள்ள முடியாத மாணவி விஷ்ணுப்பிரியா அவரது வீட்டில்   தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  ‘' எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்த வேண்டும் என்பது தான். எனது குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போது காண்பேனோ, அப்போது தான் எனது ஆன்மா அமைதியடையும்” என்று விஷ்ணுப்பிரியா உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 
 
விஷ்ணுப்பிரியாவின்  வேண்டுகோள் எல்லா பெற்றோருக்கும் கேட்க வேண்டும்; அவர்கள் மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும். அரசுக்கும் அச்சிறுமியின் குரல் கேட்க வேண்டும்; அனைத்துக் குடும்பங்களிலும் அமைதி நிலவ தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேற்றம்.. இந்திய பங்குச்சந்தை மீண்டும் சரிவு..!

இந்தியா மீது 50%ஆக உயர்ந்த வரி.. டிரம்ப் மிரட்டலை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் மோடி..!

சப் இன்ஸ்பெக்டர் தலை வெட்டிக்கொலை! கொலையாளியை என்கவுண்ட்டர் செய்த போலீஸ்!

அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரனை கைது செய்த ED அதிகாரி விருப்ப ஓய்வு.. ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments